நட்சத்திரம், ராசி, இலக்கினம், அவற்றின் அட்டவணை மேலும் பிறந்த தேதி வைத்து நட்சத்திர பலன், ராசி பலன் அனைத்தையும் தெரிந்து கொள்க.
பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் இலக்கினம் (Rasi Nakshatra Calculator in Tamil)
பிறந்த தேதி நேரம் வைத்து உங்கள் ராசி நட்சத்திரம் இலக்கினம் பெயர்கள் கண்டுபிடிப்பது, நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் என அனைத்தும் முற்றிலும் இலவசம். உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை கீழே உள்ளிட்டு திருக்கணித பஞ்சாங்கம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளலாம்.
தமிழ் ஜோதிட குறிகளான நட்சத்திரம், ராசி, இலக்கினம் என்பன உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் அடிப்படையில், திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் லாஹிரி அயனாம்சம் கணிப்புகளை கருத்தில் கொண்டு தமிழ் ஜோதிடம் பிரகாரம் கணிக்கப்படும்.
நட்சத்திரம், ராசி, இலக்கினம்
உங்கள் நட்சத்திரம், ராசி, லக்கினம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் அனைத்தினையும் இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.
நட்சத்திரம், இராசி, லக்னம் ஆகிய மூன்றினையும் அறிய வேண்டிய அவசியம், பாரம்பரிய முறைகளை கடைப் பிடிக்கும் எல்லோருக்கும் உண்டு.
திருமண பேச்சானாலும் சரி, முகூர்த்த நாள் பார்பதானாலும் சரி, குழந்தைக்கு பெயர் சூட்டுவதனாலும் சரி, சுப காரியம் எதுவானாலும், சங்கல்பம் செய்வதற்கும் நட்சத்திரம், ராசி இரண்டும் அவசியம்.
இன்றைய நட்சத்திரம், ராசி, இலக்கினம் ஆகியவற்றை கணித்து பார்க்க உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, அத்துடன் தமிழ் ஜோதிட ஞானமும் இருக்க வேண்டும்.
ஜோதிடம் தெரியாதவர்களும், இவ் இணைய தளம் வழியாக நீங்கள் பிறந்த நேரம் இடம் தேதிக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம், ராசி, லக்கினம் ஆகியவற்றை online யில் தெரிந்து கொள்க.
பிறந்த தேதியை மட்டும் வைத்து ராசி நட்சத்திரம் இலக்கினம்
பிறந்த தேதியை மட்டும் வைத்து ராசி நட்சத்திரம் இலக்கினம் கண்டுபிடிக்க, எமது பஞ்சாங்கம் இணைப்புக்கு சென்று, பிறந்த தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு, அன்றைய தினம் என்ன ராசி நட்சத்திரம் என்பதனை கண்டு பிடிக்கலாம். இலக்கினம் தெரிய வேண்டும் எனில், பிறந்த நேரம் அவசியம்.
ராசி நட்சத்திர அட்டவணை (Rasi and Nakshatra list in tamil)
தமிழ் ஜோதிடப்படி ராசி, நட்சத்திரங்கள் எவை என கீழுள்ள ராசி நட்சத்திரம் அட்டவணைகள் மூலம் பார்த்து தெரிந்து கொள்க.
நட்சத்திர அட்டவணை (Nakshatra list in Tamil)
நட்சத்திர அட்டவணை என்பது 27 நட்சத்திரங்களை உள்ளடக்கியவை. அவற்றை அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என அழைப்பர்.
ராசி அட்டவணை (Rasi list in Tamil)
ராசி அட்டவணை என்பது 12 ராசிகளை உள்ளடக்கியவை. அவற்றை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என அழைப்பர்.