மனையடி சாஸ்திரப்படி வீட்டின் நீளம் அகலம் அளவுகள், அவற்றின் குழி கணக்கு, ஆயாதி எண், ஆயாதி பொருத்தம் மற்றும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்க.
மனையடி சாஸ்திரம் என்பது என்ன?
மனையடி சாஸ்திரம் என்பது வீட்டின் நீளம் மற்றும் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற வாஸ்து பலன்கள் மற்றும் பொருத்தங்களை கணிக்கும் ஒரு பாரம்பரிய கணித முறை. இதை "அடி கணக்கு" அல்லது "குழி கணக்கு" என்றும் அழைக்கின்றனர்.
வீட்டின் அளவுகள் மற்றும் ஆயாதி கணிப்பு
வீட்டின் வெளி அளவுகளான நீளம் மற்றும் அகலத்தின் அடிப்படையில் "ஆயாதி எண்" கணிக்கப்படுகிறது. உங்கள் பிறந்த நட்சத்திரத்துடன் இந்த எண் பொருந்துமா என்பதை பார்க்கும் முறைதான் ஆயாதி பொருத்தம்.
ஆயாதி பொருத்தம் (மனை பொருத்தம்)
திருமண பொருத்தம் பார்க்கும் முறை போல், வீட்டின் ஆயாதி எண்ணுக்கும், குடியிருக்க போகும் நபரின் நட்சத்திரத்திற்கும் இடையில் பொருத்தம் பார்க்கும் இம் முறையினை ஆயாதி பொருத்தம், அல்லது மனை பொருத்தம் என்றும் அழைப்பர்.