தமிழ் பஞ்சாங்கம் வேண்டும் எனின், எந்த ஊர் என்றாலும் இன்றைய, நாளைய, அல்லது வேறு எந்த தேதிக்கும், இலவசமாக, துல்லியமாக, எளிதாக திருக்கணித பஞ்சாங்கம் இன்று கணிக்கலாம்.
தமிழ் பஞ்சாங்கம் என்றால் என்ன?
தமிழ் பஞ்சாங்கம் என்பது பல கணிப்புகளை உள்ளடக்கியது, அவையாவன திதி, யோகம், கரணம், இராகு காலம், இயம கண்டம், குளிகை, நட்சத்திரம், இராசி, நல்ல நேரம், ஓரை, மற்றும் கிரக நிலைகள் என்பனவாகும்.
தமிழ் பஞ்சாங்கம் என கூறும்போது, அவற்றில் திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என இரு வகை உண்டு.
பஞ்சாங்கம் ஜோதிடத்தின் மூலக் கணிப்பாகும். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 6 மணி 48 நிமிசம் வரை வித்தியாசம் உண்டு.
தமிழ் பஞ்சாங்கம் கணிக்க
தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும், ஏனெனில் பஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.
எனவே இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய பஞ்சாங்கம் என்றாலும், வேறு எந்த தேதியானாலும் எந்த ஒரு ஊர் எனினும், அந்த இடம், தேதி ஆகியவற்றை உள்ளிட்டு துல்லியமாக, இலவசமாக தமிழ் பஞ்சாங்கம் கணித்து கொள்ளுங்கள்.
தமிழ் பஞ்சாங்கம் எதற்கு பயன்படும்?
சாஸ்திர சம்பிரதாயங்கள் முறையினை கடைப்பிடிக்கும் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கம் பெரும்பாலும் ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம் பார்க்க போன்ற அனைத்து ஜோதிடம் சம்பந்தமான கணிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
தினமும் நாம் பார்க்கும் திதி, யோகம், கரணம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், நாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்வதற்கும், ஜோதிட பலன் அறிவதற்கு தேவையான கிரக அமைப்புகளை தெரிந்து கொள்வதற்கும் உள்ளூர் பஞ்சாங்கம் தேவைப்படுகிறது.
சர்வதேச தமிழ் பஞ்சாங்கம் 2026
உங்கள் வசதிக்காக உலகின் பெரும்பாலான நகர்களுக்கு உரிய தமிழ் பஞ்சாங்கம் தயாரிக்கபட்டு கீழ் உள்ள தொங்கு பட்டியலில் கொடுக்கபட்டுள்ளது. உங்கள் ஊர் பஞ்சாங்கம் எதுவோ அதனை தெரிவு செய்து உடனேயே இலவசமாக பார்த்து கொள்ளலாம்.