நல்ல பலன் தரும் திதிகள்
ஞாயிறு - அஷ்டமி, திங்கள் - நவமி, செவ்வாய் - சஷ்டி, புதன் - திரிதியை, வியாழன் - ஏகாதசி, வெள்ளி - திரயோதசி, சனி - சதுர்த்தசி ஆகிய நாட்களில் வரும் திதிகளில் நல்ல காரியம் செய்யலாம்.
நல்ல காரியங்கள் செய்ய கூடாத திதிகள்
ஞாயிறு - சதுர்த்தசி, திங்கள் - சஷ்டி, செவ்வாய் - சப்தமி, புதன் - துவிதியை, வியாழன் - அஷ்டமி, வெள்ளி - நவமி, சனி - சப்தமி ஆகிய நாட்களில் வரும் திதிகளில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பிதுர் கர்மம் செய்ய திதி கொடுப்பது எப்படி
திதி, திவசம், சிரார்த்தம் என்பது இறந்த உறவினர்கள், முன்னோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஈமக்கிரியை செய்து நினைவு கூறும் தினம் ஆகும்.
திதி கொடுப்பது எப்படி என தெரிந்து கொள்வதற்கு, முதலில் ஒருவர் இறந்த ஆங்கிலத் தேதி மாதம் வருடம் நேரத்தை கொண்டு இறந்தவரின் திதி எப்போது என தமிழ் நாட்காட்டி பிரகாரம் கணித்து தெரிந்து கொள்ள வேண்டும். முன்னோர்கள் எந்த திதியில் இறந்தார்களோ அத் திதியில் பிதுர் கர்மம் செய்வது தமிழ் பண்பாட்டில் மிக முக்கியமானது.
திதி தேவதைகள்
உங்கள் பிறந்த நேரத்திற்குரிய திதியினை அறிந்து கொண்டு அத் திதி அதிபதி, திதி தெய்வங்கள், திதி தேவதைகள் எவை என அறிந்து அவர்களை வணங்குவதே சிறப்பாகும். அவ்வாறு திதியின் அதிபதியை வணங்குவதனால், பிறந்த நேரத்திற்குரிய திதியன்று வணங்குவதே அதிலும் சிறப்பாகும்.
திதி கணிப்பு
உலகின் எந்த ஒரு இடம், தேதி, நேரம் எதுவானாலும் அத் தரவுகளுக்கு உரிய திதி, அத் திதியின் அதிபதி ஆகியவற்றை இலவசமாக இவ் இணைய தளம் வழியாக தெரிந்து கொள்ளுங்கள்.