ஜாதக பொருத்தம், நட்சத்திரம் மற்றும் ராசி பொருத்தம் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் இலவசமாக பார்க்கவும், உங்கள் திருமண பொருத்தத்தை முழுமையாக மதிப்பீடு செய்யவும் இந்தப் பக்கம் உதவும். திருமணத்திற்கு மிக முக்கியமான இவை தமிழ் ஜோதிடத்தின் அடிப்படையான முறைகள் ஆகும். பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை உள்ளிட்டு விரிவான ஜாதக பொருத்தம், நட்சத்திர பொருத்தம் மற்றும் ராசி பொருத்தம் அறிக்கைகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜாதக பொருத்தம் என்றால் என்ன?

ஜாதக பொருத்தம் என்பது திருமணத்திற்காக ஆண் மற்றும் பெண் ஜாதகங்களை பொருத்தி, தமிழ் ஜோதிடத்தின் அடிப்படையில் அவர்களின் பொருத்தத்தையும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்வது ஆகும்.

தமிழ் ஜோதிடப்படி திருமண பொருத்தம் பார்த்தல் என்பதனை ஜாதகம் பார்த்தல், கல்யாண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடி பொருத்தம், சாதக பொருத்தம், எனவும் பலவாறு அழைப்பர்.

உங்கள் பிறப்பு விவரங்களை சமர்ப்பித்து திருமணத்திற்கு முக்கியமான 13+ ஜாதக பொருத்தங்கள் – நட்சத்திரம், ராசி, செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களைப் பொருத்திய முழுமையான அறிக்கையை தமிழில் இலவசமாக பெறுங்கள். இருவரின் வாழ்க்கை முறை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி தமிழ் ஜோதிடம் பிரகாரம் அறிந்துகொள்ள திருமண ஜாதக பொருத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழில் ஜாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும் எனில் உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிடவும்

பெண்
நாடு
free horoscope matching
 
ஆண்
நாடு
free horoscope matching
   
 
 

ஜாதக பொருத்தத்தில் கிரக நிலையின் பங்கு

திருமண பொருத்தத்தில் கிரக நிலைகள் (Planets' positions) முக்கிய பங்காற்றுகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் ஜாதகத்தில் எவ்வாறு அமைகின்றன என்பது, தம்பதிகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கக்கூடியவை. கிரகப் பொருத்தம் மூலம் இந்த நிலைகளை மதிப்பீடு செய்யலாம்.

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி?

ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும் தமிழில் எனின், ஆண், பெண் இருவரினது பிறப்பு ஜாதகத்தினை தயாரித்து, பின்னர் அவற்றை தனியாகவும், சேர்த்தும் பார்த்து, இரு ஜாதகமும் தமிழ் ஜோதிடப்படி ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழில் இலவசமாக ஜாதகப் பொருத்தம் பார்க்க விரும்பினால், இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம். திருமண பொருத்தம் அட்டவணை அவற்றின் விரிவான விளக்கங்கள் மற்றும் முடிவுகளை இலவசமாகப் பெறலாம்.

சிறந்த திருமண பொருத்தம் எப்படி பார்க்கலாம்?

சிறந்த முறையில் திருமண பொருத்தம் பார்க்க, நட்சத்திரம் மற்றும் ராசி பொருத்தம் மட்டும் போதாது. திருமண பொருத்தம் அட்டவணை தரும் பொருத்தங்கள் அனைத்தினையும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் உண்டா என அறிந்து கொள்ள வேண்டும். சிறந்த திருமண பொருத்தம் பார்ப்பது மூலம், திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

ஜாதக பொருத்தம் பார்க்க

எங்கள் இலவச கால்குலேட்டர் ஒரு முதற்கட்ட மதிப்பீட்டை வழங்கினாலும், தனிப்பட்ட ஆலோசனைக்கு அனுபவம் வாய்ந்த தமிழ் ஜோதிடரை அணுகுவது நல்லது.

ஜாதக பொருத்தத்தின் விரிவான அறிக்கை மற்றும் விளக்கம்

  1. நட்சத்திர பொருத்தம்

    கணவன் மனைவி இருவரும் தினமும் பரிமாறும் கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வு பற்றி குறிக்கும். இதனை தின பொருத்தம் எனவும் அழைப்பர்.

  2. கண பொருத்தம்

    குணாதிசயம் மற்றும் நடத்தை ஒத்துழைப்பு, மனப்பாங்கு சமநிலையைக் குறிக்கும்.

  3. மகேந்திர பொருத்தம்

    தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்பதைக் காட்டும்.

  4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்

    மணப்பெண்ணால் குடும்பத்திற்கு வரும் வளம் மற்றும் செழிப்பைக் குறிக்கும்.

  5. யோனி பொருத்தம்

    பாலியல் இணக்கம் மற்றும் உணர்ச்சி நெருக்கத்தை மதிப்பீடு செய்யும்.

  6. ராசி பொருத்தம்

    இருவரின் ராசிகள் ஒத்துழைப்பு, செல்வம் மற்றும் வளர்ச்சியை பிரகடனம் செய்யும்.

  7. ராசி அதிபதி பொருத்தம்

    சம்பந்திகளின் உறவை குறிக்கும்.

  8. வசிய பொருத்தம்

    பரஸ்பர ஈர்ப்பு மற்றும் கவர்ச்சி சக்தியை கொடுக்கும்.

  9. இரச்சு பொருத்தம்

    திருமண பந்தத்தின் வலிமை மற்றும் தம்பதியரின் ஆயுளைக் குறிக்கும்.

  10. வேதை பொருத்தம்

    நட்சத்திர தடைகள் மற்றும் தோஷங்களை நீக்க உதவுகிறது.

  11. விருட்ச பொருத்தம்

    குடும்ப வம்ச விருத்தியைக் குறிக்கிறது.

  12. ஆயுள் பொருத்தம்

    தம்பதியரின் ஆயுட்கால சமநிலையை கணிக்கிறது.

  13. மகேந்திர பொருத்தம்

    குழந்தை செழிப்பு மற்றும் சந்ததிச் செழிப்பை கருத்தில் எடுக்கும்.

  14. தோஷ பொருத்தங்கள்

    செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷங்கள் பொருந்துகிறதா என அறியலாம்.

ஜாதகப் பொருத்தம் மற்றும் திருமண பந்தம் பற்றிய கேள்வி பதில்(FAQ)

ஜாதக பொருத்தத்தில் கிரக நிலையின் பங்கு என்ன?

திருமண பொருத்தம் பார்க்கும்போது, கிரகங்களின் நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செவ்வாய், சுக்கிரன், சனி, சந்திரன் போன்ற கிரகங்கள் ஜாதகத்தில் எவ்வாறு அமைகின்றன என்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் குடும்ப நலத்தைக் தீர்மானிக்கிறது. இத்தகைய கிரகப் பொருத்தம் மூலம், திருமண பந்தத்தின் நிலைத்தன்மையை மதிப்பீடு செய்யலாம்.

ஜாதக பொருத்தம் பார்ப்பது ஏன் முக்கியம்?

திருமண பந்தம் நல்லிணக்கமாகவும், வளமாகவும் இருக்க ஜாதக பொருத்தம் பார்ப்பது தமிழ் ஜோதிடத்தில் மிக முக்கியம். இது மணமகன் மற்றும் மணமகளின் குணாதிசயங்கள், வாழ்க்கை முறை மற்றும் எதிர்காலத்தை அறிய உதவுகிறது.

திருமண பொருத்தத்தில் எத்தனை பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன?

பொதுவாக, திருமண பொருத்தத்தில் இரச்சு பொருத்தம், கண பொருத்தம், நாடி பொருத்தம் ஆகிய 3 முக்கிய பொருத்தங்கள் ஆகும்.

அத்துடன் ராசி நட்சத்திர பொருத்தங்கள் உட்பட பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. அவை: தினம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, இராசி, ராசி அதிபதி, வசியம், விருட்சம், ஆயுள், மற்றும் வேதை பொருத்தம்.

இந்த ஜாதகப் பொருத்தம் கால்குலேட்டர் இலவசமா?

ஆம், எங்கள் ஜாதகப் பொருத்தம் கால்குலேட்டர் முற்றிலும் இலவசம்.

ஜாதகப் பொருத்தம் பார்க்க என்ன விவரங்கள் தேவை?

ஜாதக பொருத்தம் பார்க்க மணமகன் மற்றும் மணமகள் இருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விவரங்கள் தேவை.

சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் திருமணம் செய்யலாமா?

சில பொருத்தங்கள் இல்லாவிட்டாலும், மற்ற பொருத்தங்களின் வலிமை மற்றும் தோஷங்களின் தன்மையைப் பொறுத்து திருமணம் செய்யலாம். இருப்பினும், ஒரு அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

தோஷம் என்றால் என்ன? திருமண பொருத்தத்தில் தோஷத்திற்கு முக்கியத்துவம் உண்டா?

தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள சில கிரக அமைப்புகளால் ஏற்படும் குறைபாடுகளைக் குறிக்கிறது. திருமண பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் போன்ற சில தோஷங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

ரஜ்ஜு பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் நட்சத்திரங்களின் அடிப்படையில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தமாகும். இது திருமணத்தின் ஆயுள் மற்றும் பந்தத்தின் வலிமையைக் குறிக்கிறது. இதில் பொருத்தமில்லாவிட்டால் திருமணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த கால்குலேட்டர் மூலம் கிடைக்கும் முடிவு துல்லியமானதா?

இந்த கால்குலேட்டர் ஜோதிடக் கணக்கீடுகளின் அடிப்படையில் பொருத்தங்களை வழங்குகிறது. இருப்பினும், ஒரு தனிநபரின் முழு ஜாதகத்தையும் ஆராய்ந்து துல்லியமான முடிவுகளைப் பெற ஒரு ஜோதிடரை அணுகுவது சிறந்தது.

காதல் திருமணம் செய்பவர்களுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கலாமா?

ஆம், காதல் திருமணம் செய்பவர்களுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கலாம். இருவரின் குணாதிசயங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய இது உதவும்.

பிறந்த நேரம் சரியாக தெரியாவிட்டால் ஜாதகப் பொருத்தம் பார்க்க முடியுமா?

பிறந்த நேரம் சரியாக தெரியாவிட்டால் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது கடினம். முடிந்தவரை சரியான நேரத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள் அல்லது பிரசன்ன ஜோதிடம் போன்ற முறைகளை நாடலாம்.