பெயர் பொருத்தம் பற்றிய கேள்வி பதில் (FAQ)
எண் ஜோதிடப்படி, பெயர் பொருத்தம் என்றால் என்ன?
எண் ஜோதிடம் என்பது உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஒரு ஜோதிட முறையாகும். இதில் இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண்கள் மூலம் திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது.
பெயர் மட்டும் போதுமா பொருத்தம் பார்க்க?
இல்லை. சிறந்த முடிவை பெற, உங்கள் பெயரும் பிறந்த தேதியும் (தேதி, மாதம், வருடம்) தேவைப்படுகிறது.
பெயரை தமிழில் உள்ளிடலாமா?
இல்லை, உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆங்கிலத்தில், இடைவெளி இல்லாமல் உள்ளிட வேண்டும். பிறப்பு சான்றிதழில் இருப்பது போன்று சரியாக உள்ளிட வேண்டும்.
ஜாதகப் பொருத்தத்திற்கு பதிலாக எண் ஜோதிடம் பார்க்கலாமா?
இல்லை. இது ஜாதகம் அல்ல. ஆனால், சிலர் ஜாதக பொருத்தத்துடன் கூட இந்த எண் ஜோதிட பொருத்தத்தையும் சேர்த்து பார்த்து முடிவு எடுக்கின்றனர்.
திருமணமாகாமல் சேர்ந்து வாழ விரும்புகிறவர்கள் இது பார்க்கலாமா?
ஆம். திருமணமாகாமல் சேர்ந்து வாழ திட்டம் இடுபவர்களும் எண் ஜோதிடப் பொருத்தம் பார்த்து தங்களுக்கிடையே எந்த வகையான உறவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எண் ஜோதிடப்படி, பெயர் பொருத்தம் பார்க்க என்ன செய்ய வேண்டும்?
இருவரது பெயர் மற்றும் பிறந்த தேதி (தேதி, மாதம், வருடம்) ஆகியவற்றை சரியாக உள்ளிட வேண்டும். அதன் பின்னர் உங்கள் திருமண பொருத்தம் பற்றிய விளக்கத்தை உடனே காணலாம்.