ஜாதகம்
ஜாதகம், ஜாதக கட்டம், இலவச வாழ்நாள் ஜாதகம், பலன்கள் ஆகியவற்றை தமிழ் ஜோதிடம் பிரகாரம் தயாரிக்க தேவையான மென்பொருள் (Tamil Jathagam software) முற்றிலும் இலவசம்.
தமிழ் ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்போது ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில், எந்த இராசி வீட்டில் உள்ளன என்பதனை வரைபடம் போட்டு காண்பிக்கும் ஜாதக கட்டம், மற்றும் ஜோதிட குறிப்புகளும் ஆகும்.
அக் குறிப்பினை வாழ்நாள் ஜாதகம், ஜாதக கட்டம், சாதகம், ஜாதக குறிப்பு, ராசி கட்டம், கிரக கணிப்பு, கிரக நிலை கணிப்பு என பலவாறு அழைப்பர்.
ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து ஜாதக பலன் கூறுவதாகும்.
நாம் வழங்கும் தமிழ் சாதகமானது ஜாதக கட்டம், பலன்கள் என அனைத்து ஜாதக குறிப்புகளையும் உள்ளடக்கியவை.
அவையாவன; நட்சத்திரம், அதன் பாதம், ராசி, இலக்கினம், ராசி கட்டம், நவாம்ச கட்டம், நடப்பு தசை, புக்தி, திசை புத்தி காலங்கள், மற்றும் கிரகங்களின் நட்பு, பகை, நீசம், உச்சம் ஆகியனவாகும்.
பிறந்த ஜாதகம்
பிறந்த ஜாதகம் கணிக்க, பிறந்த காலம், இடம் மற்றும் உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, அப் பஞ்சாங்கமானது ஜாதகர் பிறந்த ஊரின் அட்ச ரேகை தீர்க்க ரேகை இரண்டினையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்.
இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் நாக தோஷம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் போன்ற திருமண தோஷங்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் தெரிந்து கொள்க.
பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.
இலவச வாழ்நாள் ஜாதகம், பலன்கள்
உங்கள் இலவச வாழ்நாள் ஜாதகம் மற்றும் ஜாதக பலன்கள், ராசி நவாம்ச கட்டங்கள், நட்சத்திரம் ராசி இலக்கினம் அவற்றின் பலன்கள், தசா புத்தி காலங்கள், செவ்வாய் சர்ப்ப தோசம் உள்ளனவா என அனைத்தையும் தெரிந்து கொள்க.
ஜாதகம் பார்க்க வேண்டும், ஜாதக கட்டம் பலன்கள் அறிய வேண்டும் எனின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு இலவச ஜாதகம் கணிக்க.
Tamil jathagam online free
Free Tamil Jathagam (Horoscope) software enables you to creates Jathagam in Tamil online. Get your Tamil horoscope and readings that reveals the planetary positions at the time of birth, birth star sign, zodiac sign and full horoscope interpretation.
Jathagam in Tamil given in south Indian chart style, is specific to your birth date and time, can be viewed, downloaded and printed in PDF format.